“தளபதி விஜய்” கண்மூடித்தனமாக நம்பும் இரண்டு பிரபலங்கள்.. ஒன்னுக்கு ஒன்னு சலிச்சது இல்ல

vijay
vijay

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகர், நடிகையையும் பலரை நம்பி ஏமாந்து போவது உண்டு. பிறகு சுதாரித்துகொண்டு இனி யாரையும் நம்பக் கூடாது என நினைப்பார்கள். இப்படி இருக்கின்ற நிலையில் “தளபதி விஜய்” இரண்டு பேரை கண் மூடித்தனமாக நம்புகிறார் இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது. அவர்களைப் பற்றி தான் நாம் விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்..

1. தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை விஜயின் பினாமி என சொல்லப்படும் லலித் குமார் தான் பிரமாண்ட பொருட்ச அளவில் தயாரிக்கிறார். இவரை விஜய் முழுமையாக நம்புகிறார்.

அதற்கு சில காரணமும் இருக்கு  விஜயின் அனைத்து சொத்துக்களையும் இவர்தான் பார்த்துக் கொள்கிறார். அதுமட்டுமல்லாமல் விஜயின் கல்யாண மண்டபத்தையும் இவர்தான் நடைத்தி வருகிறார். மேலும் விஜய்க்கு பல சொத்துக்களை பல இடங்களில் வாங்கிக் கொடுத்ததும் இவர்தான் என்பதால் இவர் மீது விஜய் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்.

2. விஜய் நம்பும் மற்றொரு பிரபலம் வேறு யாரும் அல்ல.. ஜெகதீஷ் தான் விஜயின் மேனேஜராக பல வருடங்கள் இருந்தார்.  இந்த சமயத்தில் தான் விஜயின் மாஸ்டர் படத்தை இவரும் கோடிகள் கொடுத்து தயாரித்திருந்தார் அந்த சமயத்தில் விஜய்க்கும், ஜெகதீசுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்ததாக பொழுது தகவல் எல்லாம் வெளியானது.

பிறகு ஜெகதீஷ் சில நடிகர்களுடன் மேனேஜராக இருந்ததால் விஜய்க்கும், இவருக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக சொன்னது ஆனால் தற்பொழுது அதை எல்லாம் மறந்து விஜய் மீண்டும் ஜெகதீசுடன் நெருக்கமாக பழகி வருவதோடு கண் மூடித்தனமாக நம்புகிறாராம். இந்த இரண்டு பேர் எது சொன்னாலும் விஜய் நம்பும் அளவிற்கு  ரொம்ப நெருங்கிய வட்டாரத்தில் இருக்கின்றனர் என சொல்லப்படுகிறது.