அஜித் குமார் மகிழ் திருமேனி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். படத்தை மிகப் பிரமாண்ட பொருள் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார் என உறுதியான தகவல்கள் வெளிவந்தாலும் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை..
இதனால் ஏகே 62 படம் உருவாகுமா ஆகாதா என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்தது. இதற்கு தெளிவான விளக்கத்தை அண்மையில் லைகா நிறுவனத்தின் உயர் அதிகாரி தமிழ் குமரன் சொன்னது ஏகே 62 படத்தின் படப்பிடிப்பது வெகு விரைவிலேயே தொடங்கும் என கூறியுள்ளார். இதனை அடுத்து பல்வேறு தகவல்கள் கசிந்த வண்ணமே இருக்கின்றன.
அதன்படி ஏகே 62 படத்தின் முதல் கட்ட சூட்டிங் மே 15 ஆம் தேதி தொடங்கும் என்றும் அதுவும் லண்டனில் தான் முதல் கட்ட சூட்டிங் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க உள்ளார் என்ற பேச்சுகள் உலா வருகின்றன.
AK 62 படத்தில் தற்பொழுது ஹீரோயின் பெயர் அடிபட்டு வந்த நிலையில் வில்லன்களும் பெயர்களும் அடிப்பட தொடங்கியுள்ளது அதன்படி அஜித்தின் தீவிர ரசிகரும், நடிகருமான ஆர் கே சுரேஷ் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இரண்டாவது வில்லனாக ஒரு நடிகரை தான் தேர்வு செய்துள்ளார். அந்த நடிகர் பெயரை யாரும் அல்ல..
சசிகுமார் தான் சினிமா பயணத்தை ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் ஹீரோவாக நடித்து வரும் சசிகுமார் வில்லனாக AK 62 படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என மகிழ் திருமேனி அவரிடம் கதை சொல்லி தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.. இந்த நடிகர்களும் ஓகே சொல்லும் பட்சத்தில் ஏகே 62 படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.