தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார் ஷூட்டிங் அனைத்தும் முடிந்த நிலையில் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டுவதாக ஒரு பக்கம் தகவல்கள் வெளி வருகின்றன.
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகி இருந்தாலும் இந்த படத்தில் ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர்.
வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக இருக்கிறது இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து தனது 67-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து பிரித்திவிராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், சுகுமாரன் மற்றும் பல நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இந்த படத்தின் ஷூட்டிங் வருகின்ற டிசம்பர் மாதம் ஆரம்பத்திலேயே தொடங்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட மைனா நந்தினி தளபதி 67 படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவிலேயே வெளிவரலாம் என கூறப்படுகிறது.. இதனால் தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.