சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 80 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் மாஸ் கலந்த படங்களில் நடித்து வருகிறார் அந்த படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுவதால் அவரது சினிமா பயணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இப்பொழுது கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அந்த படத்தை இளம் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்திற்கான கதாநாயகியை படக்குழு தற்போது தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இப்போது ரஜினியின் இடத்தை பிடிக்க யாரும் இல்லை என்றாலும் 80, 90 காலகட்டங்களில் பல பேர் இருந்தனர். சொல்லவேண்டுமென்றால் ரஜினிக்கு பயத்தை காட்டி உள்ளனர் ஒரு சில நடிகர்கள் அவர்கள் யார் என்பதை தற்போது விலாவாரியாக பார்ப்போம். இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ரஜினியை வைத்து படையப்பா, முத்து போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து அசத்தியவர் இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் சொன்னது :
ரஜினிகாந்த ஆரம்பத்தில் நடிகர் ராமராஜனின் வளர்ச்சியை பார்த்தும் அவருக்கு மக்கள் கொடுக்கும் அன்பை பார்த்தும் ரஜினி பயந்து உள்ளாராம் அதே போல ராஜ்கிரணுக்கு கிராமத்து பகுதியில் கிடைக்கும் ஆதரவை பார்த்து பயந்து உள்ளார் என கூறினார். இந்த செய்திகளை இயக்குனர் கே எஸ் ரவிகுமாரிடம் ரஜினியே வெளிப்படையாக சொல்லி இருக்கிறாராம்.
மேலும் மக்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது பார்த்தீர்களா என்று வியந்து பேசினாராம். ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு இடத்தில் மாஸ் காட்டுவார்கள் ஆனால் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் அனைத்து விதமான படங்களில் நடித்து அனைத்து ஏரியாக்களிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.