இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படம் வெளியீடு தடை விதிக்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் தடை நீக்கப்பட்டு உலகம் முழுவதும் 1500 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து ருத்ரன் திரைப்படத்தின் ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இணையத்தில் பரவி வருகிறது. இதை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகராகவும் இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது ருத்ரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் இந்த தமிழ் புத்தாண்டை ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் அனைத்து ரசிகர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் ஒரு சில பிரச்சனையின் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தடைபட்டு போனது. அதன் பிறகு கடைசி நிமிடத்தில் தடை நீக்கப்பட்ட நிலையில் இன்று படம் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை பார்த்த ஒரு ரசிகர் மாஸ் படம் மிஸ் பண்ணாதீங்க என்று கூறியுள்ளார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் சீனுக்காகவே இந்த படத்தை பார்க்கலாம். என்று ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
இதனை தொடர்ந்து இன்னொரு ரசிகர் திரையரங்கிற்கு முன்பு சில ரசிகர்கள் அகோரிகள் வேஷம் போட்டு கொண்டு ஆடும் புகைப்படத்தை வெளியிட்டு. ருத்ரன் படத்தின் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டங்கள் திரையரங்கில் களக்கட்டி வருகிறது. என்று இந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஒரு ரசிகர் முதல் ஹீரோ ராகவா லாரன்ஸ் ஆக இருந்தாலும் இரண்டாவது ஹீரோ இந்த படத்தில் அமைந்திருக்கும் கதைமுடி பாடல் தான் என்று இந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தாராளமாக தியேட்டரில் இந்த படத்தை பார்க்கலாம் என இந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார்.
கடைசியாக ருத்ரன் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகுவது போல முடிந்துள்ளதாக நெட்டிசன்கள் படம் பார்த்துவிட்டு வெளியே ரிவ்யூ கொடுத்து வருகிறார்கள். மேலும் சில ரசிகர்கள் இந்த படத்தில் அமைந்திருக்கும் சண்டை காட்சிகள் பாலையா படத்தையை தோற்கடித்து விடும் என்றும் தெலுங்கில் ருத்ரன் செம ஹிட் அடிக்கும் என்றும் கலாய்த்து வருகிறார்கள்.