உலக நாடுகளையே நடு நடுங்க வைத்துள்ளது இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது, இந்தியாவில் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் பல பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு மக்களை விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்துகிறார்கள், ஆனால் நமது மக்கள் இதை எதையும் பொருட்படுத்தாமல் சில இளசுகள் சுற்றிக்கொண்டு தான் திரிகிறது. அதனால் நடிகர்கள் சொன்னால் கேட்பார்கள் என பலரும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.
அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பது போல் பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது ரியல் மேன் சேலஞ்ச் #BetheREALMAN என்ற அடிப்படையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வீட்டு வேலைகள் செய்யும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது தாயாருக்கு உணவு சமைத்துக் கொடுத்து வீட்டு வேலைகளை செய்யும் வீடியோவை வெளியிட்டு நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சவால் விட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் உள்ள ஜூனியர் என்டிஆர், சீரஞ்சீவி, இயக்குனர் கொரடல்லா சிவா ராம்சரண், ராஜமவுலி என அனைவரும் இந்த சவாலை ஏற்று வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.