ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வைத்த லோகேஷ்.. “தளபதி 67” படத்தில் இணைந்த மற்றொரு மாஸ் பிரபலம்.?

thalapathy 67
thalapathy 67

நடிகர் விஜய் அண்மைக்காலமாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அள்ளி வீசுகிறார். அந்த வகையில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் அடுத்தடுத்த படம் பண்ண இருக்கிறார் ஏற்கனவே இந்த கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட்..

அடித்த நிலையில் அடுத்ததாக தளபதி 67 படத்தில் இணைந்துள்ளது. இந்த படம் மிகப்பெரிய ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. அந்த காரணத்தினால் இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக  போய்க்கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை பட குழு ரகசியமாக வைத்திருக்கிறது. ஏன் படத்தின் பூஜை புகைப்படங்களை கூட பட குழு வெளியிடாமல் இருக்கிறது. தளபதி 67 – ல் விஜய் உடன் கைகோர்த்து மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் மற்றொரு மாஸ் பிரபலமும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன அது குறித்து விலாவாரியாக நாம் பார்ப்போம்.. லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் பல நடிகர்களை நடிக்க வைத்து வருகிறார் அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் பலரும் ஏற்கனவே..

ஒப்பந்தமாகிய நிலையில் இந்த படத்தில் இப்போது கைதி படத்தில் டில்லி கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தி தளபதி 67 திரைப்படத்திலும் நடிப்பார் என நம்பதகுந்த வட்டாரங்கள் சைடில் இருந்து தகவல்கள் கூறுகின்றன இதனை அறிந்த ரசிகர்கள் செம சந்தோஷத்தில் இருக்கின்றனர் இருப்பினும் படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.