தொலைக்காட்சிகளில் முன்பெல்லாம் குடும்பத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை விரிவுபடுத்தி ஒரு நாடகமாக உருவாகியது சீரியல். மேலும் அந்த சீரியல்களை ரசனை மிக்க ஒரு சீரியலாக காட்டியுள்ளார்கள். இதை பார்பதற்காக பல குடும்ப பெண்கள் 6மணிக்கு மேல் டிவி முன்புதான் காத்திருப்பார்கள் .
ஆனால் தற்போது வரும் சீரியல்களில் அப்படி கிடையாது திரைப்படங்களைப் பார்த்துவிட்டு அப்படியே காப்பி அடிக்கும் ஒரு சில சீரியல்கள் மட்டும் அதேபோல் அந்த படத்தில் வரும் காட்சிகளையும் அப்படியே காப்பியடிப்பதில் இயக்குனர் அட்லீயையே மிஞ்சி விடுகிறார்கள். அப்படி ஒவ்வொரு காட்சிகளையும் ஒவ்வொரு திரைப்படத்தில் இருந்து எடுத்து அதை சீரியல்களில் வைத்து விடுகிறார்கள்.
இதை ஏராளமான மக்கள் பார்க்கிறார்கள் என்ற கவலை கூட இல்லை டிஆர்பிக்காக இப்படி பண்ணும் சீரியல்கள் எந்த ஒரு கான்செப்டுமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி ஒரு சீரியலில் உச்சகட்ட கவர்ச்சியாகவே ஒரு காட்சியை எடுத்து இருப்பார்கள்.
இதனைப் போன்று இதேபோல் தற்போதுள்ள சீரியல்களில் கவர்ச்சி காட்சிகள் ஏதேனும் ஒன்று இடம் பெற்று வருகிறது. முன்பெல்லாம் சிரியலில் கவர்ச்சி சிறிதளவு காட்டினால் கூட விமர்ச்சனங்கள் முலம் பெரும் தாக்கம் ஏற்படும். அனால் தற்போது கவர்ச்சி மிகவும் எளிமையாகிவிட்டது. மேலும் தற்போது உள்ள சினிமா ரசிகர்களை விட சீரியல் ரசிகர்கள் தான் அதிகம் என்று கூறலாம்.
மேலும் எந்த ஒரு கருத்தும் இல்லாமல் வரும் சீரியல் டிஆர்பிக்காகவே ஒரு சீரியலில் கவர்ச்சியான காட்சிகளை வைக்கப்படுகிறார்கள் இதனால் கலாச்சாரத்தை சீரழிக்கிறது டிவி சீரியல்கள் என்று பிரபல யூட்யூப் சேனலில் சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் இதுபோன்று காட்சிகளை வைப்பதால் உங்களுக்கு என்ன லாபம் மக்கள் மத்தியில் ஏன் இந்த மாதிரி காட்சிகளை வைக்கிறீர்கள் இதைப் பார்த்து தான் அவர்கள் கெட்டுப் போகிறார்கள். முன்பெல்லாம் சினிமாவில் மட்டும்தான் இது போன்ற காட்சிகள் இடம்பெறும் ஆனால் தற்போது சீரியல்களில் இந்த காட்சிகள் இடம் பெறுவதால் மக்களும் அதை ரசிக்கிறார்கள் கலாச்சாரங்களும் மாறிக்கொண்டே இருக்கிறது என்று அந்த சினிமா பிரபலம் கூறியுள்ளார்.