புயல் வேகத்தில் டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்த முக்கிய சீரியல்.. அடிமட்டத்திற்கு இறங்கிய சன் டிவி சீரியல்..

பொதுவாக மக்களுக்கு சினிமாவில் எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே ஆர்வம் சீரியலிலும் இருக்கிறது சின்னத்திரை சீரியல்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் மக்கள். அதேபோல் சிரியலில் நடிக்கும் நடிகைகளும் பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.

அந்த வகையில் சீரியலில் சினிமாவைப் போல் உணர்ச்சிகரமான நடிப்பு வசனம் கதாபாத்திரம் என அனைத்தும் மக்கள் மத்தியில் நீங்க இடத்தை பிடித்து வருகிறது அதேபோல் சீரியலின் ராஜா என்று சன் டிவியை கூறி வருகிறார்கள் ஏனென்றால் ஒரு நாளைக்கு பத்துக்கும் மேற்பட்ட சீரியல்களை அதில் ஒளிபரப்புகிறார்கள்.

என்ன தான் பல சீரியல்கள் ஒளிபரப்பினாலும் அனைத்து சீரியல்களும் மக்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை ஆனால் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி மேலே வந்து கொண்டிருக்கிறது.

கிராமப்புறம் மற்றும் நகரப்புறங்களில் சின்ன திரையில் பார்க்கப்படும் சீரியல்களைப் பொறுத்து டிஆர்பிஇல் யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என ஒவ்வொரு வாரமும் டிஆர்பி லிஸ்ட் வெளியிடப்பட்டு வருகிறது அந்த வகையில் சன் டிவி மற்றும் விஜய் டிவி தான் முன்னிலையில் வகித்து வருகிறது.

அதே போல் இந்த வாரம் டாப் 5 லிஸ்டில் அதிக ரேட்டிங் பிடித்த சீரியல்களை இங்கே காணலாம். முதலிடத்தில் இந்த வாரமும் சிறகடிக்க ஆசை சீரியல் இடம் பெற்றுள்ளது அதேபோல் இரண்டாவது இடத்தில் சிங்க பெண்ணே சீரியலும் மூன்றாவது இடத்தில் கயல் சீரியலும் நான்காவது இடத்தில் மருமகள் சீரியலும் ஐந்தாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் இடம் பிடித்துள்ளது.

இந்த முறை சன் டிவியை பின்னுக்கு தள்ளியுள்ளது விஜய் டிவி இந்த நிலைமை நீடித்து வந்தால் சன் டிவி இடம் பிடித்துள்ள டிஆர்பி லிஸ்டில் அடுத்தடுத்து விஜய் டிவி இடம் பிடிக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் கதையில் கண்டிப்பாக மாற்றம் செய்வார்கள் சன் டிவி எனவும் கூறப்படுகிறது.