யாரும் எதிர்பார்க்காத ஒரு வசூல் வேட்டையை நடத்திய துல்கர் சல்மானின் “குரூப்” – மொத்தம் எவ்வளவு கோடி தெரியுமா.?

kurup
kurup

90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் தென்னிந்திய சினிமாவில் பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தி வருவர் நடிகர் மம்மூட்டி அதிலும் குறிப்பாக தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு நிரந்தர இடத்தை அங்கு பிடித்துள்ளார்.

இவரை தொடர்ந்து அவரது மகன் துல்கர் சல்மானும் சினிமாவுலகில் வெற்றிக்கொடியை கண்டு வருகிறார் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியை ருசித்து உள்ளதால் இவர் தற்போது தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களுக்கு பிடித்துப்போன நபராக தற்போது இருக்கிறார்.

தமிழில் ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்ததைத் தொடர்ந்து தமிழில் நடிக்க ஆசை படுகிறார். இருப்பினும் நல்ல வைப்பிற்கா காத்து கிடக்கிறார். இப்படி இருக்க இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் குரூப்.

இந்த திரைப்படம் ஒரு உண்மை கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது இந்த படத்தின் சூட்டிங் எடுக்கும் போதே தெரிந்தது நிச்சயம் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெறும் என்று அதற்கு ஏற்றார்போல தென்னிந்திய சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும், வெளிநாடுகளிலும் இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இதில் துல்கர் சல்மான் நடிப்பில் வேற லெவல் தமிழில் இந்த திரைப்படம் இதுவரை 5 கொடியை அள்ளியுள்ளது மலையாளத்தில் இந்த திரைப்படம் சுமார் 31 கோடியை அள்ளியதாக கூறப்படுகிறது. ஓவர் ஆல் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 80 கோடி அள்ளிய உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் இவ்வளவு வசூல் செய்தது மிகப்பெரிய ஒரு விஷயம் என கூறப்பட்டு வருகிறது மேலும் துல்கர் சல்மானின் வளர்ச்சியை இந்த படத்தில் இருந்து இன்னும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.