ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படம் வெறும் இரண்டு நாட்களில் மட்டுமே 100 கோடியை அள்ளி புதிய சாதனை படைத்தது படம் வசூல் வேட்டை நடத்தினாலும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது.
ஆனால் பெண் ரசிகைகளை மற்றும் குடும்பங்களை கவர்ந்துள்ளது இந்த திரைப்படம் வெற்றிநடை கண்டுவருகிறது. இந்த திரைப்படம் இன்னும் சில நாட்கள் ஓடினாலே போதும் எப்படியும் 300 கோடியை தொடும் என்பது படக்குழுவின் கணிப்பாக இருக்கிறது. போதாக்குறைக்கு இந்த திரைப்படம் மக்களை கவர்ந்து உள்ளதோ இல்லையோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கவர்ந்து விட்டது.
இந்த படத்தின் கதையை சொல்லும்போதே சூப்பர் ஸ்டாருக்கு கண்களில் தண்ணீர் வந்ததாக அவர் கூறினார் இதனால் இந்த திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் ஒரு பிளாக்பஸ்டர் படமாகவே அவர் கருதுகிறார். இந்த திரைப்படம் இந்தியாவையும் தாண்டி மற்ற நாடுகளிலும் அண்ணாத்த திரைப்படம் வெளியிடப்பட்டது.
அந்த வகையில் UAE யில் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என கணிக்கப்பட்டது ஆனால் அண்ணாத்த திரைப்படம் இதுவரை 6 கோடியை மட்டுமே அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் அந்தத் திரைப்படத்திற்கு பிறகு வந்த மலையாள நடிகர் துல்கர் சல்மானின் “குரூப்” திரைப்படம்.
இதுவரை 9 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது. இது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியை வசூலில் டேக் செய்தது தற்போது சினிமா பிரபலங்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.