வெள்ளித்திரையில் விக்ரமின் மகன் என்ற அடையாளத்தோடு காலடி எடுத்து வைத்தவர் தான் துருவ் விக்ரம் இவர் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் ரசிகர்கள் மத்தியில் தனது முகத்தை பதிய வைத்தார் அதனைத் தொடர்ந்து வருமா என்ற திரைப்படத்தில் அடுத்ததாக நடித்திருந்தார் அந்த படம் ஓட்டிட்டு தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெறவில்லை என்றே கூறலாம்.
மேலும் துருவ் விக்ரம் தற்போது பல படங்களில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது அதில் அடுத்ததாக விக்ரம் 60 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது மட்டும்மல்லாமல் அதற்கு முன் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்க உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது அந்த திரைப்படம் ஸ்போர்ட்ஸ் டிராமாவின் கதை கொண்டு உருவாக உள்ளதாம் அந்த திரைப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த தகவல் துருவிக்ரமின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டும்மல்லாமல் இந்த படமாவது அவருக்கு நன்றாக கை கொடுக்குமா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.