சத்தியமா சொல்லுறேன் சிம்புக்கு இனிமேல் நான் கேரன்டி..! அவசரப்பட்டு வாயை விட்ட பிரபல தயாரிப்பாளர்..!

simbu
simbu

லாக் டவுன் நேரத்தில் ரசிகர்களின் மனதை லாக்கப் செய்தவர்தான் நடிகர் சிம்பு. ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கியது பின்னர் அதை தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து இருந்தார் ஆனால் அவை அனைத்தும் சொல்லும்படி ஹிட் கொடுக்கவில்லை.

இந்நிலையில் பழைய சிம்புவாக மீண்டும் திரையில் அடி எடுத்து வைக்கும் நமது சிலம்பரசன் தற்போது மாநாடு என்ற திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள் இயக்கியது மட்டுமல்லாமல் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிப்பில் தான் தயாரிக்கப்பட்டது.

இந்நிலையை இந்த திரைப் படத்தின் படப்பிடிப்பின் போது இந்த திரைப் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சிக்கும் நடிகர் சிம்புவுக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்தன அப்பொழுது சிம்புவின் குடும்பத்தினர் தயாரிப்பாளரிடம் இனி சிம்பு இதுபோன்று நடந்து கொள்ள மாட்டார் என வாக்குறுதி கூறினார்கள்.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி முன்வந்தார். இந்நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு இத்திரைப்படம் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த அடுத்த படப்பிடிப்பிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது.

இதற்கு முக்கிய காரணமே சிம்பு  படப்பிடிப்புக்கு சரியாக  போவதும் தயாரிப்பாளர்களிடம் தரக்குறைவாக பேசுவதும் காரணமாயிற்று. ஆனால் தற்போது சிம்பு சரியான நேரத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று  சொல்லுகின்ற ஷாட்டை மிகக்குறுகிய நேரத்தில் முடித்துக் கொடுத்து வருகிறாராம்.

இதனைத் தொடர்ந்து சிம்பு ஒரு தயாரிப்பாளரின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக அட்வான்ஸ் வாங்கி உள்ளாராம் ஆனால் பின்னர் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம் இதனால் அந்த தயாரிப்பாளர் அவரிடம் தன்னுடைய அட்வான்ஸை வட்டி போட்டு கொடுக்க வேண்டுமென மைக்கேல் ராயப்பன் கூறியுள்ளார்.

rajan-1
rajan-1

அதற்கு சிம்பு அட்வான்ஸ் மட்டும்தான் கொடுக்கப்படும் அதற்காக வட்டி எல்லாம் கொடுக்கப்பட மாட்டாது ஏனெனில் அப்படி ஏதும் ஒப்பந்தம் செய்யவில்லை என பேசி இந்த பிரச்சனைகளை முடித்துள்ளார்கள்.  இதன் காரணமாக சிம்புவின் தாயார் உஷா அவர்கள் இனி சிம்பு சரியான நேரத்தில் படத்தை முடித்துக் கொடுப்பார் என்று அவருக்கு வாக்குறுதி கூறியது மட்டுமல்லாமல் அதற்கு நான் பொறுப்பு என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு உறுதுணையாக கே ராஜன் அவர்கள் சிம்புக்கு இனிமே ஒழுங்காக நடந்து கொள்வார் என்றுகேரண்டி கொடுத்துள்ளார் .இவ்வாறு வெளிவந்த செய்தி அனது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.