சன் டிவி சீரியல்க்கென்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி. சன் டிவியில் கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஆரம்ப காலகட்டத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வந்தது.
பிறகு வெள்ளித்திரையில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு பெரிதாக வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்கள் அப்படிப்பட்ட நடிகர்களை வைத்து சன் டிவி சீரியல்களை இயக்கி வந்ததால் ரசிகர்கள் பெரும் இதனை விரும்பவில்லை.
இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட விஜய் டிவி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கும் நடிகர் நடிகைகளை வைத்து புதிய சீரியல்களை ஒளிபரப்பி வந்தார்கள். அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னிலையில் விஜய் டிவி இருந்து வந்தது.
பிறகு சமீப காலங்களாக விஜய் டிவியின் சீரியல்களை பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு சன்டிவி தரமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இந்நிலையில் தற்பொழுது கடந்த வார டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் சன் டிவியின் கயல் சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை வானத்தைப்போல, மூன்றாவது இடத்தை சுந்தரி சீரியல் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்தது ரோஜா மற்றும் ராஜா ராணி ஆகிய சீரியல்களும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு இதனை பார்க்கும் பொழுது விஜய் டிவி டாப்-5 லிஸ்டில் ஐந்தாவது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிகண்ணம்மா சீரியல் ஏழாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.