பாக்கியலட்சுமி சீரியலுக்கு டஃப் கொடுக்க வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்.. சன் டிவி டிஆர்பிக்கு ஆப்பு தான்..

vijay tv serial

Vijay tv serials: தமிழ் சின்னத்திரையில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தரமான கதை அம்சமுள்ள சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து டிஆர்பி-யில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதில் பல முயற்சிகளை செய்து வருகின்றனர் அந்த வகையில் முக்கியமான தொலைக்காட்சிகள் தான் சன் மற்றும் விஜய் டிவி.

நீண்ட காலமாக சன் டிவி டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்தாலும் சமீப காலங்களாக விஜய் மற்றும் ஜீ தமிழ் சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி சில வருடங்களுக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி மிகப்பெரிய வெற்றினை கண்டது.

இதனை அடுத்து விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் ஆனால் சமீப காலங்களாக சன் டிவியில் சீரியல்கள் தான் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அப்படி டிஆர்பியில் டாப் 5 லிஸ்டில் சன் டிவி சீரியல்கள் மட்டுமே இடம் பெற்று வருகிறது. எனவே இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் விஜய் டிவியும் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறது.

அப்படி பாக்கியலட்சுமி சீரியல் தான் முன்னணி வகித்து வந்த நிலையில் அதில் பாக்யா மற்றும் கோபி இவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்தது. இந்நிலையில் விஜய் டிவியின் மற்றொரு சீரியலான சிறகடிக்க ஆசை சீரியலுக்கும் நல்ல ரேட்டிங் கிடைத்திருக்கிறது.

siragadikka aasai
siragadikka aasai

பொதுவாக வாரம் தோறும் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாகுவது வழக்கம் அப்படி சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் வாரம் தோறும் அடுத்தடுத்து ரேட்டிங்அதிகரித்தே வருவதனால் ஒட்டுமொத்த ரேட்டிங்கில் 7வது இடத்தில் இருந்து வருகிறது. எனவே சிறகடிக்க ஆசை சீரியல் விரைவில் பாக்கியலட்சுமி சீரியலை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.