பொதுவாக சீரியல் என்றாலே அது சன் தொலைக்காட்சி தான் இளம் வயதுனர் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரையும் சன் தொலைக்காட்சி கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் பொழுதுபோக்காக இருப்பது சன் தொலைக்காட்சி தான். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் சமீப காலமாக புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
சன் தொலைக்காட்சிக்கு போட்டியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது என்னதான் புதுப்புது நாடகங்களை ஒளிபரப்பினாலும் சன் டிவிக்கு ஈடாக அவர்களால் வர முடியவில்லை. அந்த வகையில் புதுசாக வந்த மல்லி சீரியல் கடந்த வாரம் டி ஆர் பி லிஸ்டில் ஆறாவது இடத்தை பிடித்தது போல இந்த வாரமும் ஆறாவது இடத்தை தக்க வைத்துள்ளது. மல்லி சீரியல் 6.88 புள்ளிகளை பெற்றுள்ளது.
அதேபோல் கடந்த வாரம் நான்காவது இடத்தில் இருந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் 7.71 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது இன்னும் சுவாரசியத்தை அதிகப்படுத்த தற்பொழுது கவரிங் நகை மேட்டரை உள்ளே புகுத்தியுள்ளார்கள் அதனால் இந்த வரம் டிஆர்பி யில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தொர்ந்து இரண்டாவது இடத்தை பிடித்த புத்தம புது சீரியல் ஆன மருமகள் சீரியல் 7.85 புள்ளிகளை பெற்று இந்த வாரம் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் நான்காவது இடத்தில் இருந்த வானத்தைப்போல சீரியல் 7.89 புள்ளிகளை பெற்று தற்பொழுது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து முதல் வாரத்தில் இருந்து கடந்த வாரம் வரை முதல் இடத்தை கெட்டியாக பிடித்த சிங்க பெண்ணே சீரியல் 8.74 புள்ளிகளை பெற்று தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அதேபோல் முதல் இடத்தில் 8.80 புள்ளிகளை பெற்று கயல் சீரியல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இப்படி ஒவ்வொரு சீரியல்களும் தங்களுடைய டிஆர்பி ரேட்டிங்கில் முன்னேறி வருகிறது.