தொடர் வெற்றிகளை குவித்து வரும் நடிகர் சூர்யா மீண்டும் பாலாவுடன் ஒருமுறை கைகோர்த்து வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். வணங்கான் திரைப்படம் முழுக்க முழுக்க மீனவர்கள் சம்பந்தப்பட்ட திரைப்படம் என்பதால் இந்த படத்தின் சூட்டிங்..
கன்னியாகுமரி தூத்துக்குடி மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது தொடர்ந்து படத்தை சூர்யா மற்றும் இயக்குனர் பாலா நல்லபடியாக எடுத்து வந்தனர். ஆனால் இடையில் சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததால் இருவருக்கும் இடையே பிரச்சனை அதிகரித்தது என பேசப்பட்டது. ஆனால் அது ஒன்றும் இல்லை என்பது போலும் சூர்யா – பாலா சேர்ந்து பேசிக் கொண்டிருப்பது போல இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியது.
அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு ஒழுங்காக போனதாம். இடையில் பாலா இந்த படத்தில் சில மாற்றங்களை செய்வதற்காக கதை விவாதத்தில் ஈடுபட்டதாகவும் சூர்யா கோப்பட்டு சிறுத்தை சிவா உடன் இணைய போகிறார் என்றாலாம் பெரிய வதந்திகள் வெளிவந்தது ஆனால் உண்மையில் நடந்தது வேற..
வணங்கான் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக ஸ்டண்ட் செல்வா பணியாற்றி வருகிறார் அவரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் வணங்கான் படப்பிடிப்பு தளத்தில் என்ன நடக்கிறது என கேட்டுள்ளனர் மேலும் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை இருக்கிறதா எனவும் கேட்டனர் அதற்கு அவர் தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில் அவர் சொல்லி உள்ளது. இயக்குனர் பாலா – சூர்யா இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இப்பொழுதுதான் இரண்டு சண்டை காட்சிகளை எடுத்து முடித்தோம் ஷூட்டிங்கில் எந்த மாற்றமும் இல்லாமல் எல்லாமே நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது என கூறினார். வதந்திகளை எதையும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். இது நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு நிம்மதியை தற்போது கொடுத்துள்ளது.