நடிகை திரிஷா தற்பொழுது ராங்கி என்ற ஆக்சன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில் அந்த பட டிரைலர் தற்பொழுது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் கடைசியாக நடித்திருந்த நிலையில் இந்த படத்தின் மூலம் வெற்றியினை கண்டார்.
மேலும் இவருடைய கதாபாத்திரம் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார். மேலும் இவர் இதன் மூலம் தன்னுடைய இழந்த மார்க்கெட் மீண்டும் அடைவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் ராங்கி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த படத்தினை எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் இயக்கிய இயக்குனர் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ளது மேலும் லைக்கா நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்திற்காக நடிகை திரிஷா மிகவும் கடினமாக உழைத்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அதாவது இந்த படத்தில் பல ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில் அதற்கு நடிகை திரிஷா டூப் போடாமல் நடித்துள்ளாராம். எனவே இவருக்கு வாழ்த்துக்கள் கிடைக்க வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ராங்கி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் நடிகை திரிஷாவை தொடர்ந்து மலையாள நடிகரான அனஸ்வர ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் ஸ்ரீ சத்யா படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.