ரசிகர்களை பாடாய் படுத்திய திரிஷாவின் 10 திரைப்படங்கள்..! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்..!

trisha-01
trisha-01

தமிழ் திரை உலகில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து கலக்கி வருபவர் தான் நடிகை திரிஷா இவ்வாறு இவர் சினிமாவில் நீடித்து நிற்க முக்கிய காரணம் என்னவென்றால் அவருடைய அழகு தான் இந்த அழகின் மூலமாக ஏகப்பட்ட இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தது மட்டுமில்லாமல் அசத்தலான கதையம்சம் உள்ள திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

அந்தவகையில் திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

மௌனம் பேசியதே திரைப்படம் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சூர்யா நடித்து இருப்பார் அதுபோல கதாநாயகி கதாபாத்திரத்தில் திரிஷா மற்றும் லைலா ஆகியோர்கள் நடித்த இந்த திரைப்படம் ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது மட்டுமில்லாமல் மாபெரும் வெற்றி கண்டது.

சாமி திரைப்படம் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் விக்ரமுக்கு மனைவி கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து இருப்பார் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை ஹரி இயக்கிய அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க  திரிஷா குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்களும் இன்றும் ரசிகர்களின் மனதில் அலை கடலா ஓடிக்கொண்டிருக்கிறது.

கில்லி திரைப்படமானது தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் தரணி இயக்கிய இது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். மேலும் இத் திரைப்படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் பிரகாஷ்ராஜ் செய்யும் வில்லத்தனமான காமெடி தான்.

உனக்கும் எனக்கும் என்ற திரைப்படமானது ஜெயம் ரவி நடிப்பில் உருவான திரைப்படமாகும் இதில் கதாநாயகியாக திரிஷா மற்றும் குணச்சித்திர வேடத்தில் பிரபு ஆகியோர்கள் நடித்திருப்பார்கள். இவ்வாறு உருவான இந்த திரைப்படத்திலும் திரிஷா குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுப்பார்.

அபியும் நானும் என்ற திரைப்படமானது பிரகாஷ் ராஜ் நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இந்த திரைப்படத்தில் செல்ல மகளாக அது என்ற கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து இருப்பார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் திரிஷாவின் கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டது.

வின்னைதாண்டி வருவாயா திரைப்படமானது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மனது முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இதில் கதாநாயகனாக நடிகர் சிம்பு நடித அதுமட்டுமில்லாமல் இறுதிகட்ட கதாபாத்திரத்தில் சமந்தா அறிமுகமாக இருப்பார்.

மங்காத்தா திரைப்படமானது வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும் இதில் கதாநாயகனாக அஜித் நடித்தது மட்டுமில்லாமல் நாயகியாக திரிஷா நடித்து இருப்பார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் திரிஷாவின் நடிப்பை தனித்துவமாக எடுத்துக் காட்டப்பட்டது.

என்னை அறிந்தால் திரைப்படத்திலும் நடிகை திரிஷா அஜித்துடன் மறுபடியும் கூட்டணி வைத்து இருப்பார் இந்த திரைப்படத்தில் ஒரு பெண் குழந்தையுடன் தனிமையில் இருக்கும் திரிஷா அஜித்தின் காதல் வலையில் விழுவது மிகவும் தத்ரூபமாக இந்த திரைப் படத்தில் காட்டப்பட்டிருக்கும்.

அதன்பிறகு தனுஷுடன் கொடி என்ற திரைப்படத்தில் திரிஷா நடித்து இருப்பார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த திரைப்படமாக அமைந்தது.

96 திரைப்படமானது விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பள்ளி காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இந்த திரைப்படம் தமிழ் மொழி மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.