முன்னணி நடிகரின் அறிவுரையின்படி அரசியலில் அறிமுகமாகி அடுத்த எம்ஜிஆர், ஜெயலலிதாவாக வாழ ஆசைப்படும் திரிஷா.!

trisha
trisha

பொதுவாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலரும் அரசியலில் வருவது மிக சாதாரண ஒரு விஷயமாக இருந்து வருகிறது. மேலும் தொடர்ந்து ஏராளமான நடிகர்,நடிகைகள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அரசியலில் தங்களது கவனத்தை காண்பித்து வருகிறார்கள். மேலும் பலரும் தற்பொழுது அரசியலில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் நடிகர், நடிகைகளும் இருக்கிறார்கள்.

இவ்வாறு ஒரு சில நடிகர், நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இவர்கள் அரசியலுக்கு தகுதியானவர்கள் தான் என்று வாக்களித்து வருவதையும் மக்கள் அனைவரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழக அரசியல் நடிகர்களை நம்பி மட்டுமே இன்று வரையிலும் பல முதலமைச்சர்களை பெற்றுள்ளது.

இவ்வாறு நடிகர்கள் எந்த அளவிற்கு அரசியலில் ஆர்வம் காட்டுகிறார்களோ அதே போல் நடிகைகளும் தொடர்ந்து தங்களது கவனத்தை அரசியலில் செலுத்தி வருகிறார்கள் அந்த வகையில் பல நடிகைகள் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில் முதன்மையாக கருதப்படும் செல்வி ஜெயலலிதா அவர்கள் மட்டுமே முக்கியமான அரசியல்வாதியாக கருதப்படுகிறார்கள். மேலும் திரையுலகினை தாண்டி ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மனதையும் கவர்ந்து தன்னைப் போல் மற்ற நடிகைகளும் திரை உலகிலும்,அரசியலிலும் சாதித்து காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டவர் தான் ஜெயலலிதா.

அந்த வகையில் இவர்களை தொடர்ந்து குஷ்பு அவர்கள் அரசியலுக்கு வந்தார்கள் திமுகவில் இணைந்தார் பிறகு சில காரணங்களால் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தற்பொழுது பிஜேபி கட்சியில் இருந்து வருகிறார் மேலும் இவருக்காக ரசிகர்கள் கோவில் கட்டிய கதைகளும் இருக்கிறது. இவருடைய பேச்சில் அரசியல்வாதிகளின் பார்வையில் மிகவும் நகைச்சுவையாக இருந்தது இப்படிப்பட்ட நிலையில் கவுன்சிலராக கூட ஒரு பதவியும் வாங்க முடியாமல் பெயருக்கென்று கட்சியில் இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது நடிகை திரிஷா அரசியலில் வர போகிறாராம் இதனைத் தொடர்ந்து குஷ்பை போல் காங்கிரஸ் கட்சியில் இணையள்ளார் என்றும் கூறப்படுகிறது ஏனென்றால் தற்பொழுது பெரிதாக சினிமாவில் இவருக்கு அந்தஸ்து இல்லாத காரணத்தினால் மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் தன்னுடைய மரியாதையை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக நாயகன் விஜய் ஆரம்பிக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பினை வாங்கப் போகிறாராம்.

இவ்வாறு விஜய்யின் அறிவுடைய படி தான் இவருக்கு அரசியலில் வர ஆர்வம் வந்ததாகவும் தெரிவிக்கின்றனர் இவ்வாறு எடுத்துக்காட்டாக எம்ஜிஆர் பக்கத்தில் ஜெயலலிதா எப்படி இருந்தாரோ அதேபோல் விஜயும் திரிஷாவும் காங்கிரஸ் கட்சியின் மூலம் அடுத்த அரசியல் ஜோடிகளாக உருவாக இருக்கிறார்கள் மேலும் இவர்கள் அரசியல் வாழ்வில் பிரபலமடைவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.