நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார், ஒரு காலகட்டத்தில் திரிஷா பலரின் கனவு கன்னி என்றே கூறலாம், அந்தளவு மிகவும் பிரபலமடைந்த நடிகையாக இருந்தார்.
திரிஷா முதன்முதலில் ஜோடி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதனைத் தொடர்ந்து ‘மௌனம் பேசியதே’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து. இதுவரை திரிஷா 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திரிஷா நடிப்பில் இன்னும் 5 திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கிறது, மேலும் திரிஷா பொன்னியின் செல்வன் உட்பட சில திரைப்படங்களில் நடித்துள்ளார் இந்த நிலையில் திரிஷா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தான் நடித்த முதல் திரைப்படம் முதல் இதுவரை வெளியாகிய திரைப்படத்தின் பெயர் மற்றும் தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயரை வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் தான் நடித்த கதாபாத்திரத்தில் வரையப்பட்ட அவரின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
திரிஷா தான் நடிக்கும் காலகட்டத்தில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தனது சொந்த வாழ்க்கை வேறு சினிமா வாழ்க்கை வேறு என தனித்தனியாக பிரித்து படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் தற்போது திரைக்கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இதோ அவர் வெளியிட்ட வீடியோ.