40 வயதில் திரிஷா சேர்த்து வைத்திருக்கும் “சொத்து மதிப்பு” இத்தனை கோடியா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

trisha
trisha

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை த்ரிஷா. இவர் முதலில் மாடல் அழகியாக பிரபலமடைந்து பின் 1999 ஆம் ஆண்டு ஜோடி படத்தில் கேமியோ ரோலில் நடித்து என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு “மௌனம் பேசியதே” படத்தில் சந்தியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அன்றிலிருந்து இப்பொழுது வரையும் உச்ச அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜய்சேதுபதி, ரஜினி போன்ற நடிகர்களுடன் நடித்து வெற்றிகளை அள்ளினார் தற்பொழுதும் நடித்துக் கொண்டும் வருகிறார். கடைசியாக இவர் நடித்த ராங்கி, பொன்னியின் செல்வன் 1,2 போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்துள்ளது.

கை வாசம் லியோ, தி ரோடு, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்கள்  இருகின்றன. குறிப்பாக லியோ திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் வெற்றி பெற வெளிச்சத்தில் நயன்தாராவின் மார்க்கெட்டை மிந்தி போவார் திரிஷா எனக் கூறப்படுகிறது. இப்படி திரையுலகில் வெற்றி நடிகையாக ஓடும் த்ரிஷா..

இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார் இந்த நிலையில் இன்று 40 வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. லியோ படத்தில் நடிக்க சுமார் 4 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. மாதம் 60 லட்சம் ஆண்டுக்கு 9 கோடி வரை திரிஷாவுக்கு விளம்பரத்தின் மூலமே பணம் வருகிறதாம்..

இது தவிர சென்னையில் 6 கோடியில்  சொந்த வீடு, ஹைதராபாத்தில் ஒரு வீடு, ரியல் எஸ்டேட் மூலம் சம்பாதிக்கிறார்.  60 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர்  எவோக், 63 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் இ கிளாஸ், 40 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார்களும் திரிஷாவிடம் இருக்கின்றன அவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் 70 முதல் என்பது கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.