38 வயதில் அதிரடி முடிவை எடுத்த த்ரிஷா.! கவலையில் ரசிகர்கள்

trisha

90s காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை திரிஷா. இவர் ஜோடி என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு  மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான சாமி, சிம்பு நடிப்பில் வெளியான அலை, விஜய் நடிப்பில் வெளியான கில்லி, சூர்யா நடிப்பில் வெளியான ஆறு, போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திரிஷா அவர்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரிஷா அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர்.

தற்போது இவரது கைவசம் பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை 2, ராங்கி, கர்ஜனை போன்ற திரைப்படங்கள் உள்ளன. இவற்றில் பொன்னியின் செல்வன் படத்தை தவிர வேறு இரண்டு படங்கள் படப்பிடிப்பு முடிந்து வெளியாக தயாராகி உள்ளது.

trisha
trisha

இந்நிலையில் திரிஷா அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக நடிகை திரிஷா அவர்கள் புதிய படங்களில் கமிட் ஆகவில்லை என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறியதாக தகவல் கசிந்துள்ளது.

நடிகை திரிஷாவிற்கு திருமணம் நடக்க போகும் செய்திகளை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் குடும்பத்தினர்களும்  சந்தோஷத்தில் பொங்கி வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.