நயன்தாராவை ஓரங்கட்ட பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய த்ரிஷா.! இப்படியெல்லாம் நடக்குமா.?

Trisha
Trisha

Trisha : தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் ஆரம்பத்திலிருந்து டாப் ஹீரோக்களுடன் படம் பண்ணுவது மற்றும் சோலோ படங்களில் நடிப்பதால் இவருடைய மார்க்கெட் குறையவே இல்லை..

திருமணத்திற்கு பிறகு கூட நயன்தாராவுக்கு வாய்ப்புகள் குவிக்கின்றன கைவசம் ஜவான், நயன்தாரா 75, டெஸ்ட் போன்ற படங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவருடைய மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது.   இவரது இடத்தை பிடிக்க  கீர்த்தி சுரேஷ்,  திரிஷா போன்றவர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

குறிப்பாக திரிஷா ஆரம்பத்தில் இருந்து நயன்தாராவுடன் போட்டி போட்டு வருகிறார் தற்பொழுது  திரிஷாவுக்கும் வெற்றி படங்கள் அடுத்தடுத்து வந்து குவிக்கின்றன  பொன்னியின் செல்வன் பார்ட் 1, பார்ட் 2 படங்களை தொடர்ந்து விஜயன் லியோ  படத்திலும் நடித்துள்ளார் அதனை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடிக்க இருக்கிறது. நயன்தாரா லெவலுக்கு திரிஷாவும் தற்போது உயர்ந்து கொண்டே வருகிறார் இதனால் இரண்டு பேருக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

ஒரு சமயத்தில் நயன்தாராவின் மார்க்கெட்டை வீழ்த்த திரிஷா பிளான் போட்டு உள்ளார்.. குருவி படத்தில் முதலில் நடிக்க வேண்டியது நயன்தாரா தான் அதேசமயம் அந்த சூழலில் சிஎஸ்கே அணி தூதராகவும் விஜய் மற்றும் நயன்தாரா நியமிக்கப்பட்டனர்.

திடீரென ஒரு நாள் திரிஷா வந்து விஜயை சந்தித்து பேசி உள்ளார் உடனே குருவி படத்தில் நயன்தாராவை தூக்கிவிட்டு த்ரிஷா ஒப்பந்தமானார் அதேபோல் சிஎஸ்கே அணியின் ஐபிஎல் தூதராக இருந்த நயன்தாராவின் பதவியையும் பறிக்கப்பட்டது. இதற்கு அத்தனைக்கும் காரணம் திரிஷா தான் பின்னாடி இருந்து வேலையை பார்த்ததாக கூறப்படுகிறது.