அழகு தேவதையாய் மின்னும் த்ரிஷா.! பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியான போஸ்டர்..

trisha-12

மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக  உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் ரிலீஸ்காக ஒட்டுமொத்த உலகமும் காத்து வருகிறது. ஏனென்றால் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை திரைப்படப் பார்க்க வேண்டும் என்பது பலரின் கனவை மணிரத்தினம் நினவாக்கியுள்ளார்.

மேலும் கடந்த சில வாரங்களாகவே இத்திரைப்படத்தினை பற்றி அப்டேட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள நிலையில் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இத்திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம்,தமிழ், கன்னட மொழி ஆகிய ஐந்து மொழிகளிலும் உருவாகியுள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பதற்காக நாள்தோறும் அந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் பிரபலங்களின் கேரக்டர்கள் பற்றிய போஸ்டர் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ஏற்கனவே சியான் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கும் ஆதித்ய கரிகாலன் கேரக்டரின் லுக் வெளியானது. இதனைத் தொடர்ந்து வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்திக்கின் கேரக்டர் லுக் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராயின் நந்தினி கேரக்டர் போன்றவை வெளியாகி ட்ரெண்டிங்கானது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கும் இளவரசி குந்தவை கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகிவுள்ளது. இதில் த்ரிஷா எழில் கொஞ்சம் அழகுடன் தேவதையாக பேரழகியாக மிளிர்கிறார். இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் திரிஷாவின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதைப்படி வந்தியத்தேவனின் மனைவிதான் குந்தவை. அப்படி பார்த்தால் இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இவர் அடுத்தடுத்த போஸ்டர் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் நாளை அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவியின் போஸ்டர் வழியாக வாய்ப்பிருக்கிறது.

Trisha ponniyin selvan
Trisha ponniyin selvan

இவர்களைத் தொடர்ந்து சுந்தரசோழன் கதாபாத்திரத்தில் அமிதாபச்சன், பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் என பல தெலுங்கு, இந்தி முன்னணி பிரபலங்களும் இணைந்து நடித்திருப்பதால் அடுத்தடுத்த அனைவரின் போஸ்டர்களும் வெளிவரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.