தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. 20 வருடங்களுக்கு மேலாகியும் தனது அழகும் பொலிவும் மாறாமல் இருக்கும் நடிகை திரிஷா தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அது மட்டுமல்லாமல் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாலம் இருக்கிறது.
மேலும் நடிகை திரிஷா அவர்கள் தற்போது உள்ள முன்னணி நடிகர்களான விஜய், அஜித், கமல், சிம்பு, உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து உள்ளார். மேலும் நடிகை திரிஷா அவர்கள் தற்போது நடித்து வரும் எந்த படமும் சரியாக போகாத காரணத்தால் நடிகை திரிஷாவிற்கு சரியான பட வாய்ப்பு அமையாமல் போனது.
இதனால் தனது மார்க்கெட்டை இழந்து தவித்து வந்த நடிகை திரிஷா அதிர்ஷ்டம் அடித்தது போல் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் மேலும் தன்னுடைய மார்க்கெட்டை மேலும் உயர்த்தி உள்ளார்.
இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா அவருக்கு அடுத்தது தான் நடிகை சமந்தா. அப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா சினிமாவில் உள்ள நடிகைகளை விட அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை திரிஷா அவர்கள் தான் நடிக்கும் திரைப்படங்களில் இதுவரைக்கும் 1.5 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த திரிஷா தற்போது தன்னுடைய சம்பளத்தை இரு மடங்கு உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. சரியான பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த நடிகை த்ரிஷாவுக்கு ஜாக்பாட் அடித்தது போல் அமைந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த படத்திற்கு பிறகு நடிகை திரிஷா அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ள திரைப்படங்களில் 3 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சம்பளம் உயர்த்தியது தெரிந்தும் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு பிரபலமாக உள்ள திரிஷாவை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கின்றனர் என்ற கூறப்படுகிறது.