40 வயதில் 39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா.. என்ன கொடுமை சார் இது.!

trisha
trisha

Actress Trisha Krishnan: ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்து வந்து பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த நடிகை திரிஷா. வயதான காரணத்தினால் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்தது. பிறகு மீண்டும் 96 படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து தற்போது ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றினை தொடர்ந்து விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் விரைவில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் பிறகு தமன்னா அந்த படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் திரிஷா தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். அதாவது மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்ற ப்ரோ டார்லிங் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் திரிஷா சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நிலையில் இவர்களுடைய மகன் கேரக்டரில் சர்வானந்த் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அந்த வகையில் 40 வயதாகும் திரிஷா 39 வயதாகும் சர்வானந்துக்கு அம்மாவாக நடிக்க இருக்கும் நிலையில் இது எப்படி நியாயம் என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் இது குறித்து ஏராளமானவர்கள் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இவ்வாறு வயதானாலும் தன்னுடைய மார்க்கெட்டை மீண்டும் பெற்று திரிஷா தொடர்ந்து நடித்து கலக்கி வருகிறார். அப்படி தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.