நைட் பார்ட்டின்னா ரொம்ப பிடிக்குமோ.? தம்மாதுண்டு டவுசரை போட்டுகிட்டு அலப்பறை பண்ணும் திரிஷா.. வைரலாகும் புகைப்படங்கள்

trisha

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் கல்லூரி படிக்கும் பொழுதே மாடலிங் துறையில் அதிகம் ஆர்வம் காட்டி வந்தார்.  இவர் 1999 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மிஸ் சேலம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் அதனைத் தொடர்ந்து “மிஸ் சென்னை” அழகி போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

இப்படி மாடலிங் துறையில் புகழ்பெற்ற த்ரிஷாவுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன முதலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் மௌனம் பேசியதே, உனக்கு 20 எனக்கு 18 போன்ற படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளினார். ஒரு கட்டத்தில் டாப் நடிகரான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று நடித்தார்.

இதனால் திரிஷாவின் சினிமா மார்கெட் கிடு கிடுவென உயர்ந்தது இப்படி திரையில் வெற்றி நடிகையாக ஓடிய இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தான் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. இதற்கு த்ரிஷா  என் வாழ்வில் இப்படி இருக்கா தான் எனக்கு பிடித்திருக்கிறது எனக்கூறி கல்யாண பேச்சை அப்படியே நிறுத்தி விடுகிறார்.

இப்பொழுது வயது அதிகமானாலும் பட வாய்ப்புகள் மட்டும் குறைந்தபாடில்லை கடைசியாக கூட இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28-ம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜயின் லியோ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

trisha
trisha

இப்படிப்பட்ட நடிகை த்ரிஷா இரவு பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொள்ளக்கூடியவர் அப்படி இரவு பார்ட்டியில் பல நடிகைகளுடன் இவர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் உலா வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  இரவு பார்ட்டி என்றால் அவ்வளவு பிடிக்குமா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

trisha
trisha