படத்தில் நடிப்பது குறித்து த்ரிஷா எடுத்த அதிரடி முடிவு.!

trisha 7
trisha 7

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வருபவர் நடிகை திரிஷா மற்ற நடிகைகள் விடவும் கிட்டத்தட்ட 15 வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார்.பொதுவாக நடிகைகள் அழகு குறையும் வரை மட்டும் தான் அவர்களால் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க முடியும் ஆனால் திரிஷாவின் கட்டுக்கோப்பான உடல் அமைப்பினால் தற்போது வரையிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார்.

இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு சில காலங்கள் திரைப்படங்களில் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே சில காலங்கள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற 96 திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இத்திரைப்படமும் இவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது இதனை தொடர்ந்து இவருக்கு ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக பரமபதம் திரைப்படம் வெளிவந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது இவர் கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை-2, சுகர்,1818 ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.  இவர் தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு முக்கியமாக பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எனவே தற்போது இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களின் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது லாக் டவுன் நேரத்தில் வீட்டிலேயே இருந்து வரும் திரிஷாவிடம் சில இயக்குனர்கள் தற்பொழுது வீட்டிற்கு வந்து கதை சொல்கிறோம் நீங்கள் ஓகே சொன்னால் லாக் டவுன் முடிந்தவுடனே படப்பிடிப்புக்கு ஆரம்பிக்கலாம் என்று கூறினார்களாம்.

ஆனால் த்ரிஷா கதை கேட்க மறுத்துவிட்டாராம் லாக் டவுன் முடிந்தவுடன்  கதை கேட்கிறேன் அதன் பிறகு படப்பிடிப்பு வேலைகளை பார்த்துக் கொள்ளலாம் என்று கறாராக கூறிவிட்டாராம்.