நடிகை திரிஷா ஒரு காலகட்டத்தில் அஜித், விஜய், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் அப்பொழுது ரசிகர்களின் கனவுக்கன்னி என்றால் அது த்ரிஷா தான். அந்தளவு ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வைத்திருந்தார்.
இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் 1999 ஆம் ஆண்டு ஜோடி என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதன்பின்பு சூர்யாவின் மௌனம் பேசியதே திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். அதன் பின்பு பல திரைப்படங்களில் நடித்து வந்த திரிஷா ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பின்பு இவருக்கு சரியான பட வாய்ப்பு அமையாததால் கொஞ்சம் சினிமாவில் தடுமாறினார், ஆனால் 37 வயதானாலும் இன்னும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு சேதுபதி நடிப்பில் வெளியாகிய 96 திரைப்படத்தில் நடித்து மீண்டும் தான் ஒரு முன்னணி நடிகை தான் என்று நிரூபித்தவர்.
இப்படி தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் திரிஷா சமீப காலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
என்னதான் தனக்கு வயதானாலும் அந்த வயதை வெளிக்காட்டாத அளவிற்கு தனது உடல் எடையை கட்டுடன் வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர் அதனால் உடற்பயிற்சி டயட் என அனைத்தையும் மேற்கொள்வார்.
எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் திரிஷா எப்பயாவது ஒரு புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது குதிரையுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் எது குதிரை என்று தெரியவில்லையே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.