ஒரே படத்தில் இணையும் த்ரிஷா – நயன்தாரா.! இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிபோடும்..

trisha-and-nayanthara
trisha-and-nayanthara

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் திரிஷா மற்றும் நயன்தாரா இவர்கள் இருவருமே திரையுலகில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருக்கின்றனர். நயன்தாரா  – த்ரிஷா பெரும்பாலும் டாப் ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடித்துள்ளதால் இவரது மார்க்கெட் இன்றும் குறையவில்லை.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டிருந்தாலும் பட வாய்ப்புகள் குறையாமல் இருந்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஹீரோயின்னாக நடிகை நயன்தாரா நடிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, மும்பை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தை வெற்றிகரமாக முடிந்து விட்டு அடுத்ததாக கோல்ட், கனெக்ட், நயன்தாரா ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இவரை போலவே நடிகை திரிஷாவும் தொடர்ந்து பல பட வாய்ப்புகளை கைவசம் வைக்கிறார் இவர் நடிப்பில் அண்மையில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி..

நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷாவுக்கு இன்னும் பட வாய்ப்புகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை திரிஷா – நயன்தாரா  இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க வருகின்றனர் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

ஜித்து ஜோசப் இயக்கம் புதிய படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இருவரில் ஒருவர் நடிந்தாலே ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுவார்கள் இருவரும் ஒரே படத்தில் இருப்பதால் ரசிகர்கள் இப்பொழுதே அந்த படத்தை எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்களில் வெளிவரவில்லை..