தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்து வரும் நடிகை தான் திரிஷா இவ்வாறு பிரபலமான நமது நடிகை இதுவரை சினிமாவில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் நடிகை திரிஷா திரைக்கு வந்த போது இதில் எப்படி இருந்தாரோ இன்று வரை அதே லுக்கில் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை உருவாக்கியது மட்டும் இல்லாமல் தற்போது வரை வயது ஆகாத மாதிரி இருப்பதால் பல ரசிகர்களும் இவரிடம் கேள்வி எழுப்பி வருவது வழக்கமாகி போய்விட்டது.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகை திரிஷாவை பற்றி பேசாத ரசிகர்களே கிடையாது ஏனெனில் அந்த அளவிற்கு கொள்ளை அழகு இந்த திரைப்படத்தின் மூலம் காட்டியிருப்பார்.
மேலும் நடிகை திரிஷா அவர்கள் சமீபத்தில் விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடிக்க போவதாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை திரிஷா பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கொடுத்து வந்தார்.
அப்பொழுது திரிஷாவுக்கு பிடித்த உணவு என்னவென்று கேட்டதற்கு அதற்கு பிராமின் சவுத் இந்தியன் உணவு என்றார் அவை என்னுடைய வீட்டில் செய்வதுதான் பிடிக்கும் அதே போல நார்த் இந்தியன் என்றால் ரெஸ்டாரன்ட் சென்று ஆர்டர் செய்து சாப்பிடுவேன் மேலும் தாய் சைனீஸ் போன்ற பல உணவுகளையும் சாப்பிடுவேன் என்று கூறியிருந்தார்.
அந்த வகையில் உணவு பற்றி பேசிய பொழுது தன்னுடைய ஜாதி பற்றி குறிப்பிட்டு பேசிய திரிஷாவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருவது மட்டுமில்லாமல் இவை சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பறவி வருகிறது.