ஒரே ஒரு போன் கால் செய்த த்ரிஷா.! மறுக்காமல் உதவி செய்த விஜய்.. இந்த மனசு தாயா கடவுள்

vijay-trisha
vijay-trisha

வசூல் நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் தற்பொழுது வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது மேலும் இந்த திரைப்படத்தினை வம்சி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார் மேலும் இந்த திரைப்படம் விஜய்க்கு கொஞ்சம் ஸ்பெஷல் என்றுதான் கூற வேண்டும்.

ஏனென்றால் திரைப்படத்தில் 14 வருடங்களுக்கு முன்பு கதாநாயகியாக நடித்த திரிஷாவுடன் இணைந்து நடிக்கப் போகிறார் இதன் காரணமாக இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது.விஜய் மற்றும் திரிஷா கூட்டணிகள் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது இதனால் இவர்கள் ரசிகர்களின் ஃபேவரட் ஜோடிகளாக மாறிவிட்டார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் தளபதி 67 படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி த்ரிஷாவிற்கு கிடைத்தது என்பது பற்றிய தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகிய வருகிறது. அதாவது திரிஷா ஹிட் மூவி கொடுத்து ரொம்ப நாள் ஆகிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் மேலும் இவருக்கு பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்தார். இதனால் விஜியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்டு இருக்கிறார்.

அதாவது நீங்கள் அடுத்து நடிக்கப் போகும் தளபதி 67 படத்தில் எனக்கு சான்ஸ் கொடுங்கள் என கேட்டு இருக்கிறார் எனவே விஜயும் லோகேஷ் கனகராஜ் இடம் இதனைப் பற்றி கூறி தளபதி 67 படத்தில் இவர் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை வாங்கித் தந்துள்ளார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் கண்டிப்பாக திரிஷாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இவருக்கு தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு ஆக்சன் படத்தில் திரிஷாவிற்கு இவ்வாறு வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணம் விஜய் உதவினால் தான். இப்படிப்பட்ட நிலையில் இவர்களின் கூட்டணியில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ள நிலை இந்த திரைப்படமும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.