தமிழ் திரையுலகில் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்து அதன் பின்பு பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து எப்படியோ ஒரு வழியாக தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகை என்ற பெயரோடு வலம் வரும் நடிகை தான் த்ரிஷா.
இவர் தமிழ் திரையுலகில் பணியாற்றி வந்த பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் இவரது நடிப்பில் தற்போது ராங்கி,பொன்னியின் செல்வன் போன்ற பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது அதிலும் குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கும் இந்த திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படங்கள் வெளியானால் இவருக்கு நல்ல வரவேற்பு தரும் எனவும் ரசிகர்கள் பலரும் கூறி வரும் நிலையில் இவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும்.
என்ற எண்ணத்தில் சமீபகாலமாக ஒரு சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மேலும் கடந்த சில நாட்களாகவே தமிழ் திரையுலகில் பணியாற்றியவரும் பல பிரபலங்களின் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் நடிகை த்ரிஷா துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனைப் பார்த்த பல ரசிகர்களும் நடிகை த்ரிஷா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் என இவரை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.