Trisha : தமிழ் சினிமாவில் இன்று பிரபலமான நடிகையாக வருபவர் திரிஷா. இவர் முதலில் மாடல் அழகியாக வலம் வந்து பிரபலமடைந்து வெள்ளி திரைக்கு வந்தார் முதலில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தோன்றி வந்த இவர் “மௌனம் பேசியதே” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து இவர் நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் தேர்ந்தெடுத்த நடித்து மார்க்கெட்டை பிடித்தார். மேலும் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, விக்ரம், ரஜினி, கமல் போன்றவர்களுடன் நடித்தார், இப்பவும் அளவும் நடித்து ஓடிக்கொண்டு இருக்கிறார் வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் பார்ட் 1, பார்ட் 2 திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படங்களில் குந்தவை கதாபாத்திரத்தில் செம்ம அழகாக நடித்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.
கைவசம் லியோ பட நடித்துள்ளார் அதனை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் இவர் கமிட்டாக உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன இந்த நிலையில் நடிகை திரிஷா ஐரோப்பாவில் உள்ள ஸ்கேன்டடி நேவியா தீவிவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அப்பொழுது இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஆகாதா இப்பவும் அழகாக இருக்கிறீர்கள் எனக் கூறி கமெண்ட் அடித்து புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ அழகில் ஜொலிக்கும் நடிகை திரிஷாவை நீங்களே பாருங்கள்.