பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் காரணமாக நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டவர்களின் ட்விட்டரில் ப்ளூ டிக் இழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் பட குழுவினர்கள் தீவிரமாக புரமோஷன் பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தங்களது டுவிட்டர் பக்கத்திலும் பெயர்களை மாற்றியுள்ளனர் என்பது தெரிந்த ஒன்றுதான்.
குறிப்பாக த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் குந்தாவை என்றும், ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் அருள்மொழிவர்மன் எனவும் பெயரை மாற்றி வைத்துள்ளனர். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிரபலங்கள் அனைவரும் நார்மலாகவே அந்த கதாபாத்திரத்தில் செந்தமிழில் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
இதனை ரசிகர்களும் ரசிக்க தொடங்கிய நிலையில் ஒரு கட்டத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனால் ஜெயம் ரவி, திரிஷா தனது ட்விட்டர் கணக்கில் பெயரை மாற்றியதால் அவர்களுடைய ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
அதாவது ட்விட்டர் நிறுவனத்தை எலான் மாஸ்க் வாங்கிய பிறகு பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த மாற்றத்தில் புதிய விதிகளின்படி ஒரு டுவிட்டர் பயனாளி தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றினார் அவர்களது பிளூ டிக்கை இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த விதியின் படி தான் திரிஷா, ஜெயம் ரவி ஆகியோர்களது ட்விட்டர் கணக்கின் ப்ளூ டிக்கை இழந்துள்ளனர் இவ்வாறு இந்த தகவல் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.