திரை உலகில் 22 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து ஓடிக்கொண்டிருப்பவர் நடிகை திரிஷா இவர் முதலில் குணச்சிதர கதாபாத்திரங்களில் நடித்து படிப்படியாக வளர்ந்து ஒரு கட்டத்தில் ஹீரோயின்னாக அறிமுகமானார். மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுடன் நடித்திருப்பார் அந்த படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த படத்திற்கு பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தது அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், கமல், ரஜினி என பலருடன் நடித்தார். இப்பொழுதும் கூட மார்க்கெட் குறையாமல் நடித்து வருகிறார் ஏன் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் படம்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் செம சூப்பராக திரிஷா நடித்து தனது திறமையை மீண்டும் வெளி உலகத்திற்கு காட்டி இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் அவரைப் பற்றிய ஒரு செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
10 வருடத்திற்கு முன்னர் நடிகர் சூர்யாவையும், நடிகை திரிஷாவையும் வைத்து பிரபல இயக்குனர் ஒரு படம் பண்ண முடிவெடுத்து இருக்கிறார் இது குறித்து சூர்யாவிடம் சொன்னபோது திரிஷாவுக்கு வயசு ஆச்சு.. அவங்க கூட எல்லாம் நடிக்க முடியாது என தடாலடியாக தெரிவித்து விட்டாராம் இதனை அந்த இயக்குனர் அப்படியே போய் நடிகை த்ரிஷாவிடம் சொல்ல..
கடுப்பான அவர் முதல அவர வளர சொல்லுங்க என்ன பேச வந்துட்டாருன்னு சொல்லியதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு செய்தி அடிபட்டது. அதன் பிறகு நடிகர் சூர்யாவும், நடிகை திரிஷாவும் இணைந்து எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றனர்.