தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் வருடத்திற்கு இரண்டு மூன்று திரைப்படங்களில் நடித்து விடுவது வழக்கம் அதிலும் குறிப்பாக சோலோ படங்களில் பெண்களை மையப் படுத்தி வரும் கதைகளில் நடிப்பதால் இவருக்கான மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
ஆனால் அண்மையில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களை சற்று ஓரம் கட்டி வைத்துவிட்டு தனது கணவருடன் ஹனிமூனை அழகாக கொண்டாடி வருகிறார் இதுதான் சரியான நேரம் என கருதி பல நடிகைகளும் நயன்தாரா வாய்ப்பை தட்டிப் பறித்து வருகின்றனர். அந்த வகையில் திரிஷா விட்ட இடத்தை பிடிக்க இதுதான்.. சரியான நேரம் எனக் கருதி மீண்டும் தமிழ் சினிமாவில் கம் பேக் கொடுத்து உள்ளார்.
மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் நயன்தாரா இடத்தை பிடிக்க த்ரிஷாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது அதேசமயம் திரிஷா நயன்தாராவின் இடத்தை சைலண்டாக ஒரு நடிகை தொடர்ந்து பிடித்துக் வருவதாக சொல்லப்படுகிறது.
அந்த நடிகை வேறு யாரும் அல்ல ஐஸ்வர்யா ராஜேஷ் தான் இவர் தற்பொழுது டாப் ஹீரோக்களின் படங்களில் மட்டும் நடிப்பது இல்லாமல் சோலோ படங்களிலும் நடித்து வெற்றி கண்டு வருகிறார். அண்மையில் கூட இவர் சுழல் படத்தில் பெண்களை மையப்படுத்தி இருந்த கதையில் சூப்பராக நடித்து வெற்றி கண்டார் அதனைக் தொடர்ந்து பல்வேறு சோலோ படங்களிலும் கமிட் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறார்.
இதனால் நயன்தாராவின் வாய்ப்பை அதிகமாக தட்டி தூக்கி வருகிறார் என்ற செய்தி வருகிறது அப்படி என்றால் நயன்தாராவுக்கு அடுத்த இடத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் பிடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் பொன்னியின் செல்வன் படம் திருஷாவுக்கு வெற்றி பெரும் பட்சத்தில் நயன்தாரா இடத்தை அவரும் பிடிக்க வாய்ப்புகள் இருக்கிறது ஆனால் தற்பொழுது நயன்தாரா இடத்தை பிடிக்க ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஒரு பக்கம் கூறி வருகின்றனர்