தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் மீதி நேரங்களில் தனது காதலனுடன் நேரம் செலவிட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு வழியாக இவர்கள் இருவரும் ஆறு வருடங்கள் கழித்து ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர் இவர்களது திருமணத்திற்கு உறவினர்கள் நண்பர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர் விக்கி நயன்தாரா கல்யாணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தாலி எடுத்துக் கொடுத்து அசத்தினார்.
ஒருவழியாக இவர்களது திருமணம் முடிந்தது. இவரை தொடர்ந்து சினிமா உலகில் பல பிரபலங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர் அவர்களும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து டாப் நடிகர்கள் தொடங்கி இளம் நடிகர்களின் படங்களை விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் இப்படி இருக்கின்ற இவர் தற்போது தனிப்பட்ட சினிமா பிரபலங்களையும் விமர்சிக்கத் தொடங்கி உள்ளார்.
அந்த வகையில் நயன்தாரா கல்யாணத்தை தொடர்ந்து இன்னும் திரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவருக்கு தற்பொழுது 39 வயது ஆகிறது இந்த நிலையில் புளு சட்டை மாறன் கூறி உள்ளது. திரிஷா நீ எப்ப கல்யாண சாப்பாடு போட போற.. வயதாகிக் கொண்டே போகிறதா இல்லையா.. என விமர்சித்து உள்ளார். இது தற்போது திரிஷா ரசிகர்களை சற்று கட்டுப்பாட்டில் உள்ளது.