குந்தவையானதும் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய த்ரிஷா.! நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பாங்க போல..

nayanthara-trisha
nayanthara-trisha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா சினிமாவிற்கு அறிமுகமாக 20 வருடங்களுக்கு மேலாகியும் தன்னுடைய இளமையுடன், அதே பொலிவுடன் மிகவும் அழகாக இருந்து வரும் நிலையில் இவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதற்கு முன்பு சில காலங்கள் பெரிதாக பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார். ஆனால் தற்பொழுது மீண்டும் இவருடைய மார்க்கெட் சினிமாவில் உயர்ந்துள்ளது.

நடிகை திரிஷா சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து விஜய், அஜித், விக்ரம், கமல் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதன் காரணமாக இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது இந்நிலையில் தற்பொழுது தனக்கென ஒரு அந்தஸ்தையும் பிடித்துள்ள இவர் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார் இதில் இவருடைய நடிப்பு, அழகு போன்றவை ரசிகர்களின் மனதை பெரிதளவில் கவர்ந்தது எனவே தற்போது மேலும் இவருடைய மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்து இருக்கிறது.

இந்நிலையில் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் நயன்தாரா உள்ளார். இவரைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் சமந்தா இருந்து வரும் நிலையில் தற்போது திரிஷா ஒரு படத்திற்கு 1.5 கோடி சம்பளம் வாங்கி வந்த நிலையில் இதற்கு மேல் புதிதாக நடிக்கும் திரைப்படங்களில் தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி 3 கோடி சம்பளமாக கேட்டிருக்கிறாராம்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் இவருக்கு மவுஸ் அதிகமாகி உள்ள நிலையில் இவரை தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்களும் முன்வருகிறார்கள். எனவே திரிஷா அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறாராம் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகை நயன்தாராவின் மார்க்கெட் குறைந்துள்ள நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு த்ரிஷா முன்னேறி வருகிறார்.