தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் தற்பொழுது படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீதியுள்ள படப்பிடிப்புகள் காட்சியாகப்பட்டு வருகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ரசிகர்களின் க்ரஷ் ராஷ்மிகா மந்தானா நடித்த வருகிறார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கிறார் இந்த படம் முழுக்க முழுக்க லோகேஷ் படமாக தான் இருக்கும் என அவரே கூறி உள்ளார் மேலும் தற்பொழுது தன்னுடைய முழு ஈடுபாட்டுடன் வேலைகளை ஆரம்பித்துள்ளார் இதன் காரணமாக சோசியல் மீடியாவில் இருந்து கொஞ்ச நாள் விலகி இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் அவ்வப்பொழுது வந்து கொண்டே இருக்கின்றனர் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் விஜய் என பட குழுவினர்கள் சிலர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியிருந்தது இதனை தொடர்ந்து சமந்தா மற்றும் திரிஷா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்ற செய்தியும் பரவியது.
இப்படிப்பட்ட நிலையில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பாதி உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது திரிஷா மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் தளபதி 67 படத்தில் திரிஷா இணைந்துள்ள நிலையில் அவருக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் மூலம் லட்சக்கணக்கில் சமந்தா சம்பளம் கேட்டுள்ளாராம்.
அதாவது தளபதி 67வது படத்திற்கு பிறகு தன் சம்பளத்தை கூட்டி உள்ளாராம். அந்த வகையில் இவரின் நடிப்பில் தயாராகும் படமான ரோடு என்ற திரைப்படத்தில் ஹீரோயினை மையமாக வைத்து தயாராகி வரும் இப்படத்திற்காக தன் சம்பளத்தை 1.25 கோடியாக உயர்த்தி உள்ளாராம் திரிஷா.