சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி. இந்தப் படத்தை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டுமென அப்பொழுதே சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை கேட்டுக் கொண்டனர்.
இயக்குனர் பி வாசு இதன் இரண்டாவது பாகத்தை கொடுக்க வேண்டும் என ஏற்கனவே திட்டம் போட்டார் ஆனால் அது அப்பொழுது நடக்கவில்லை. இரண்டாம் பாகத்தை எடுத்தே தீர வேண்டும் என்பதற்காக பி வாசு கதையை எல்லாம் ரெடி செய்து ஹீரோவுக்காக காத்துக் கொண்டிருந்தார் ஆனால் ரஜினி இரண்டாவது பாகத்தில் நடிக்க முன் வராததால் இழுபறியில் கடந்தது.
ஆனால் ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் துணிந்து நடிக்க முன் வந்ததால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் முதலில் திரிஷா ஹீரோயின் என சொல்லப்பட்டது. ஒரு சமயத்தில் ராகவா லாரன்ஸ்சுக்கும், திரிஷாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட இந்த படத்தில் இருந்து திரிஷா விலகியதாக கூறப்படுகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கியது ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் பல்வேறு படங்களில் கமிட்டாகியதால் அந்தப் படத்திலும் நடிக்க போனார். இதனால் தொடர்ந்து மாற்றி மாற்றி ஒவ்வொரு படங்களிலும் நடித்து வந்ததால் அவ்வபொழுது சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.
அப்பொழுதெல்லாம் திடீரென நடிகை திரிஷாவை கூப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் ஆரம்பத்தில் தொடர்ந்து கூப்பிட்ட சரியான நேரத்திற்கு போனார். ஒரு கட்டத்தில் திரிஷா கோப்பட்டு ராகவா லாரன்ஸ்ஸிடம் நீ மற்ற படங்கள் நடித்துவிட்டு நேரம் இருக்கும் பொழுது சந்திரமுகி 2 படத்தில் நடிப்பாய்.. நான் மட்டும் நேரம் காலம் பார்க்காமல் நடிக்கணும்மா முடியாது என பேசி உள்ளார் இதன்பின் நடிகை திரிஷாவை அந்த கதாபாத்திரத்தில் இருந்து தூக்கி விட்டு லட்சுமி மேனனை நடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.