39 வயதிலும் திரிஷாவுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்..! யாருடன் கொண்டாடியுள்ளார் பாருங்கள்..!

vijay91

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை திரிஷா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் அஜித் என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் அமைந்தது மட்டுமில்லாமல் மிக எளிமையாக முன்னணி நடிகை பட்டத்தை பெற்று விட்டார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை என்று தன்னுடைய 39வது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடி உள்ளார்.

இவ்வாறு அவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்களும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.நடிகை திரிஷா சுமார் 20 வருடங்களாக சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இவருடைய அழகிலும் சரி உடற்கட்டு கொம்பிலும் சரி அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் தன்னுடைய பிட்னஸ் சீக்ரெட் அவர் வெளியிட்டது பலருக்கும் ஆச்சரியம் ஊட்டும் அளவிற்கு இருந்தது.

இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளை நடிகை திரிஷா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தன்னுடைய அம்மா உடன் இணைந்து சுவாமி தரிசனம் வாங்கியுள்ளார்.மேலும் திருப்பதிக்கு சென்ற பல்வேறு ரசிகர்கள் பெருமக்களுடன் அவர் செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

trisha-02
trisha-02

பொதுவாக பிரபல நடிகைகள் தங்களுடைய பிறந்தநாளை ஹோட்டல் அல்லது பப் என ஸ்டைலிஷான இடங்களில் கொண்டாடுவது வழக்கமான ஒரு செயல் தான் அப்படி இருக்கும் நிலையில் நடிகை திரிஷா கோவிலில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்ததுள்ளது.

trisha-02