சிவலிங்கங்கள் முன்பு செருப்புடன் படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷா.? ஆத்திரம் அடைந்த ரசிகர்கள்.

thrisha4

தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் எதிர்பார்த்து வரும் திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அதிலும் குறிப்பாக பல இயக்குனர்களும் இந்த திரைப்படத்தை எடுத்தால் நன்றாக இருக்கும் என இந்த கதையை தயார் செய்து வந்தார்கள் ஆனால் எல்லோருக்கும் முன்பு மணிரத்னம் முந்திக் கொண்டார்.

இத்திரைப்படத்தில் விக்ரம்,ஜெயம் ரவி,கார்த்தி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் என ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பிரபலங்களாக நடிப்பதால் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சமீபத்தில் இந்த திரைப்படத்தில் ஒரு உயிர் பலி ஏற்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி விட்டது மணிரத்னம் மீது வழக்கு தொடர்ந்து வருவதாகவும் தகவல் சமூக வலைதளங்களில் வெளியானதை நாம் பார்த்திருப்போம்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் அமைந்துள்ளது அங்கு த்ரிஷா மற்றும் கார்த்தி,ரகுமான் போன்ற இடையிலான காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது இந்நிலையில் த்ரிஷா செய்த விஷயத்தை பற்றி ஒரு தகவல் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் த்ரிஷா சிவலிங்கங்களையும்,இந்துக்களையும் அவமானப்படுத்தும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் காலில் செருப்பு அணிந்து நடித்ததாக கூறப்படுகிறது.இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் சிவலிங்கங்கள் முன்பு நீங்கள் செருப்பு அணிந்தது எங்களை வருத்தத்தில் ஆழ்த்தி விட்டது என கூறி வருகிறார்கள்.

thrisha
thrisha

ஒரு சில ரசிகர்கள் இந்த தகவல் உண்மையா என கேட்டு வருவது மட்டுமல்லாமல் உங்களை நாங்கள் மிகவும் நம்பி வந்தோம் ஆனால் நீங்கள் இப்படி ஒரு காரியத்தை செய்வீங்க என நினைத்து கூட பார்க்கலை என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.