தளபதி 67 படத்தில் நடிக்க 3 கோடி சம்பளம் கேட்ட த்ரிஷா.? இடையில் குறுக்கிட்டு மொத்தையும் மாற்றிய விஜய்.

vijay-
vijay-

நடிகை த்ரிஷா சினிமா உலகில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல இப்பவும் இருப்பதால் இவரை தேடி பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. அந்த படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாகவும் மாறுகின்றன.

அண்மையில் இவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் மிக அழகாகவும், சூப்பராகவும் நடித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து நடிகை த்ரிஷாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன அந்த வகையில் அஜித்தின் ஏகே 62, தளபதி 67..

மற்றும் பெயரிடப்படாத பல்வேறு படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார் என கூறப்படுகிறது. அதில் முதலாவதாக இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 67. இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகை திரிஷா ரெடியாக இருக்கிறார். இந்த படத்திற்காக அவர் சம்பளமாக 3 கோடி கேட்டுள்ளார்.

ஆனால் இதற்கு முன்பாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததற்காக 2 கோடி தான் சம்பளம் வாங்கினார். ஆனால் பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற்றதன் காரணமாக தளபதி 67 படத்தில் நடிக்க 3 கோடி கேட்டாராம். இதை அறிந்த தளபதி விஜய் திரிஷாவும் நானும் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் இதுவும் ஒரு வெற்றி படமாக அமையும் என்ற காரணத்தினால்..

அவருக்கு ஒரு கோடி சம்பளம் அதிகமாக போட்டு நான்கு கோடி ரூபாய் தர தயாரிப்பாளரிடம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடிகை த்ரிஷா செம்ம சந்தோஷத்தில் இருக்கிறாராம் மேலும் தளபதி 67 திரைப்படம் வெற்றி பெறும் பட்சத்தில் நடிகை நயன்தாரா, சமந்தா ஆகியோர்களின் மார்க்கெட்டை கீழே தள்ளி நடிகை த்ரிஷா முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.