ராஜ ராஜ சோழனின் சகோதரி குந்தவையாக சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்த த்ரிஷா.! வைரல் வீடியோ..

நடிகை திரிஷா மகா சிவராத்திரியை முன்னிட்டு காஷ்மீரில் உள்ள சிவாலயம் ஒன்றிற்கு சென்று அங்கு பூஜை செய்திருக்கும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் திரிஷா சமீப காலங்களாக அடுத்தடுத்து திரைப்படங்களின் நடித்துவரும் நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பிரியா ஆனந்த், கௌதமேனன், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு உலகெங்கும் மகா சிவராத்திரி பூஜை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

எனவே பொதுமக்கள், திரைப்பட பிரபலங்கள் என அனைவரும் சிவாலயங்களுக்கு சென்று கண்விழித்து காத்திருந்தனர். அந்த வகையில் பல நடிகைகள் சிவராத்திரியில் கலந்துக் கொண்டு பூஜையை மேற்கொண்ட நிலையில் திரிஷாவும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு காஷ்மீரில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்திய வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

trisha
trisha

திரிஷா ஆண்டு தோறும் சிவராத்திரி அன்று சிவன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் இவ்வாறு இந்த வருடமும் லியோ படபிடிப்பிலிருந்து கொண்டே இவ்வாறு அங்கு இருக்கும் சிவலிங்கத்திற்கு வழிபட்டது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திரிஷா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த நிலையில் இந்த படத்தில் திரிஷா தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவையாக நடித்திருந்தார். எனவே இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் திரிஷா குத்தவையாக இப்படி சிவனுக்கு பூஜை செய்வதை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருப்பதாக கமாண்டுகள் செய்து வருகின்றனர்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.