தளபதி விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார் தில் ராஜூ தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டு கட்டப்படப்பிடிப்பு வெற்றிகரமாக..
முடிந்த நிலையில் மூன்றாவது கட்டப்படிப்பு நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்த நான் ஜெயசுதா குஷ்பூ பிரகாஷ்ராஜ் சரத்குமார் யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர் நடித்து வருகின்றனர் வாரிசு படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிற மறுபக்கம் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான்.
படத்தில் தளபதி விஜய் ஒரு கேமியோ ரோலில் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று விஜய் ஜவான் படக்குழுடன் இணைந்தார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் தீயை பரவியது. இந்த இரண்டு படங்களையும் விஜய் வெற்றி கரமாக முடித்துவிட்டு அடுத்ததாக தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் விஜயின் சினிமா மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு புதிய தகவல் இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது அதாவது தளபதி 67 படத்தில் சமந்தா முதலில் ஹீரோயின்னாக நடிப்பார் என பேசப்பட்டது பிறகு சமந்தா இல்லை திரிஷா என சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் சமந்தாவும் கிடையாது, திரிஷாவும் கிடையாது இவர்களுக்கு பதிலாக தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை என்றாலும் இந்த செய்தி தற்போது தீயாய் பரவி வருகிறது