ஒரே நேரத்தில் நான்கு முன்னணி நடிகர்களை தனது கட்டுக்குள் கொண்டு வந்த த்ரிஷா.! 40 வயசாகியும் குறையாத மார்க்கெட்.

trisha next 4 movie
trisha next 4 movie

Trisha : தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், அஜித் விஜய் ஆகியோர்களின் படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் நடித்துவிட வேண்டும் என பல நடிகர் நடிகைகள் ஏங்கியதுண்டு. அதிலும் இளம் நடிகர் நடிகைகள் எப்படியாவது இவர்களின் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என பல முயற்சி செய்வார்கள் ஆனால் ஒரு நடிகை ரஜினி, கமல், அஜித், விஜய் என நான்கு திரைப்படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

அவர் வேறு யாரும் கிடையாது நடிகை த்ரிஷா தான் நான்கு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதால் இவருக்கு சுக்கிர திசை நடந்து வருகிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் திரிஷா விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

ஏனென்றால் இதற்கு முன்பு வெளியாகிய லோகேஷ் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூலில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது இந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் லியோ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அதுமட்டுமில்லாமல் மணிரத்தினம் இயக்க இருக்கும் கமலஹாசன் திரைப்படமான கமல் 234 திரைப்படத்திலும் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து லோகேஷ் ரஜினிகாந்த் இணையும் புதிய திரைப்படமான தலைவர் 171 வது திரைப்படத்திலும் திரிஷா தான் கதாநாயகி என கூறப்படுகிறது ஏற்கனவே த்ரிஷா ரஜினியுடன் பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த நிலையில் மீண்டும் ரஜினியுடன் தலைவர் 171-வது திரைப்படத்தில் இணைய இருப்பதால் ஹோலிவுட்டில் ஆச்சரியப்படுகிறார்கள்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு திரிஷாவுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுகிறது என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.