தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளிவந்த ஏராளமான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் ஒரு சில திரைப்படங்கள் பல ஆண்டுகள் ஆனாலும் கூட மறக்க முடியாத அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் பெற்று வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் நான் ஆடுகளம்.இத்திரைப் படத்தை வெற்றிமாறன் இயக்கி இருந்தார். அந்த வகையில் இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதால் தேசிய விருதையும் பெற்றது.
இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை டாப்ஸி. இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் இவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவரைத் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள்.
அந்த வகையில் ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாப்சிக்கு பதிலாக முதலில் திரிஷா நடிக்க இருந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். முதலில் த்ரிஷா தான் ஒப்பந்தமாகியிருந்தார் ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் த்ரிஷாவால் இத்திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.
அந்த வகையில் திரிஷா ஆடுகளம் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டது. அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.