விக்ரம் படத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே நடித்த ஏஜெண்ட் டினாவுக்கு கிடைத்த மரியாதை.! வைரலாகும் புகைப்படம்..

vikram-movie-11
vikram-movie-11

நடிகர் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடுத்துள்ள திரைப்படம்தான் விக்ரம்.  கோலிவுட் சினிமாவை திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த திரைப்படம் இருந்து வருகிறது.  அதோடு மட்டுமல்லாமல் பல வருடங்களுக்கு பிறகு இதே போன்ற ஒரு படம் வெளியாகி இருக்கிறது என்றும் கூறலாம்.

இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைப்பில் உருவானது.  வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதை சமீபத்தில் கமலஹாசன் உறுதி செய்வதை பார்த்தோம்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கு முக்கிய காரணம் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகிய மூவரின் நடிப்பும் தான். இந்த திரைப்படத்தின் சின்ன கேரக்டரில் நடித்தவர்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளார்கள்.

அந்த வகையில் கமலஹாசனின் மருமகளுக்கு பாதுகாப்பாகவும், வேலையாகவும் ஏஜென்ட் டினா என்ற கேரக்டரில் வசந்தி என்பவர் நடித்திருந்தார்.  தற்பொழுது இவரைப் பற்றிய தகவல்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

vikram-movie-actress
vikram-movie-actress

அதாவது தற்போது வசந்தி “நினைவெல்லாம் நீயடா ” என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.  அந்த திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது படக்குழுவினர்களுக்கு மாலை அணிந்து பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்தனர்.  விக்ரம் படத்தில் மொத்தமே பத்து நிமிட காட்சிகளில் நடித்த ஒரு நடிகைக்கு அடுத்த படத்தின் குழுவினர் மாலை மரியாதை செய்தது மிகப்பெரிய ஆச்சரியத்துடன் பார்க்க படுகிறது.